மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

நலம் பெற்றார் தன்யஸ்ரீ

நலம் பெற்றார் தன்யஸ்ரீ

சென்னையில் குடி போதையில் மாடியிலிருந்து விழுந்த ஒருவரால் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த 4 வயதுச் சிறுமி தன்யஸ்ரீ தற்போது சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் பேத்தி தன்யஸ்ரீயை அழைத்துக்கொண்டு வீட்டின் அருகே இருந்த கடைக்குச் சென்றார். அப்போது ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து குடிபோதையில் இருந்த ஒரு நபர் தவறி தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் சிறிதான வீக்கமும் தண்டுவடம் மற்றும் காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தன் குழந்தையின் சிகிச்சைக்கு உரிய பணமில்லாமல் தவித்த ஸ்ரீதர் - ஸ்ரீதேவி தம்பதிக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்தன.

சிறுமி தன்யஸ்ரீயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தந்தை ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். “சிகிச்சைக்கு உதவிய அரசு, ஊடகங்கள் மற்றும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி என்பதைத் தவிர என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பலரின் பிரார்த்தனை வீண்போகாமல் தற்போது குழந்தை நலமாக இருக்கிறாள்" என்று ஸ்ரீதர் நெகிழ்ந்துள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon