மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

செயற்கை நுண்ணறிவு கேமராவுடன் எல்.ஜி!

செயற்கை நுண்ணறிவு கேமராவுடன் எல்.ஜி!

எல்.ஜி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமரா வசதியுடன் அதன் புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

மொபைல் விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இருக்கும் நிலையில் எல்.ஜி நிறுவனம் பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு தனக்கென ஒரு இடத்தைப் பெற முயற்சி செய்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு எல்.ஜி நிறுவனம் வெளியிட்ட G6 என்ற மாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் எல்.ஜி சமீபத்திய மாடல்களால பயனர்கள் மத்தியில் கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளது.

அதன் தொடர்ச்சியாக V30s என்ற புதிய மாடலை தயாரித்து வரும் எல்.ஜி நிறுவனம் அதனை வருகிற (பிப்ரவரி) 26ஆம் தேதி பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் அறிமுகம் செய்ய உள்ளது. 256GB இன்டெர்னல் வசதி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் புதிய ஸ்னேப்டிராகன் 845 ப்ராசஸ்சர் வசதி கொண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கூடுதல் சிறப்பம்சமாக செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் மாடல்களில் இந்த கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. இதனைப் பயன்படுத்தி ஒரு பொருளினை புகைப்படம் எடுப்பதன் மூலம் அதன் தகவல்களை பயனர்கள் தெரிந்து கொள்ள இயலும்.

இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராவானது பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் வெளியீடு மற்றும் பிற வசதிகள் குறித்த தகவல்கள் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon