மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

காலா வீடியோ லீக்: படக் குழு அதிர்ச்சி!

காலா வீடியோ லீக்: படக் குழு அதிர்ச்சி!

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் காலா, 2.0 ஆகிய இரு படங்களில் முதலாவதாக எந்த படம் வெளியாகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துவந்த நிலையில் காலா படம் அந்த ரேஸில் முந்தியது. ஏப்ரல் 27ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியின் வீடியோவை வெளியிட்டு சிலர் படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்துள்ளனர்.

படங்கள் திரையரங்கில் ஒளிபரப்பாகும்போது அதை முறைகேடாக இணையதளங்களில் வெளியிடுவது மட்டுமல்லாமல் தற்போது படப்பிடிப்பின்போதே காட்சிகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்புவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். திரையுலகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருக்கும் இப்பிரச்சினையிலிருந்து மெகா பட்ஜெட் படங்களிலிருந்து லோ பட்ஜெட் படங்கள் வரை எதுவும் தப்புவதில்லை. தற்போது அதற்கு ரஜினியின் காலா படம் இலக்காகியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகிப் படக் குழுவுக்கு அதிர்ச்சியளித்த நிலையில் தற்போது படத்தின் சண்டைக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. கம்பியுடன் தாக்க வரும் ஒருவரை ரஜினி அடிக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

வெளியான சண்டைக் காட்சி

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon