மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கோயம்பேடு காய்கறி விலை சரிவு!

கோயம்பேடு காய்கறி விலை சரிவு!

சென்னை கோயம்பேடு சந்தையில் அதிக வரத்து காரணமாக காய்கறிகளின் விலை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அளவுக்கு அதிகமான வரத்து காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. முன்பு கிலோ ஒன்றுக்கு 9 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று 6 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, முட்டைக்கோஸ் விலை 4 ரூபாயாகவும், கத்தரிக்காய் மற்றும் முள்ளங்கி விலை 5 ரூபாயாகவும் குறைந்துள்ளது. பீட்ரூட் விலையும் 7 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதர காய்கறிகளான உருளைக் கிழங்கு ரூ.14, பீன்ஸ் ரூ.15, வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை ரூ.10 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை 25 ரூபாயாகவும், சாம்பார் வெங்காயம் விலை 26 ரூபாயாகவும் இருக்கிறது. முருங்கை விலை 35 ரூபாயாகக் குறைந்துள்ளது. மேற்கூறிய காய்கறிகளைத் தவிர மற்ற அனைத்துக் காய்கறிகளின் விலையும் 15 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon