மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தைத் திறந்தது தவறு!

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தைத் திறந்தது தவறு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறந்தது தவறு எனக் குறிப்பிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அதிமுக சார்பில் வெளியில் படத்தைத் திறந்துகொள்ளலாம் என்று விமர்சித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் இன்று திறக்கப்பட்டது. திமுக உட்பட பல்வேறு கட்சிகளும் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி அவரது படம் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று(பிப்ரவரி 12) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏ1 குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தைச் சட்டசபையில் திறந்தது தவறு. தேவைப்பட்டால் அதிமுக சார்பில் வெளியில் திறந்துகொள்ளலாம். சட்டசபையில் திறக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக தேமுதிகவின் 18ஆவது ஆண்டு கொடி அறிமுக நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடிய விஜயகாந்த் ஏற்றிவைத்தார். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு குறித்த கேள்விக்கு, பாஜக அரசு நினைத்தால் எதையும் செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon