மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

முதலீடு செய்யத் தயங்கும் வெளிநாட்டினர்!

முதலீடு செய்யத் தயங்கும் வெளிநாட்டினர்!

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கடினமான தேர்வாக இந்தியா உள்ளதாக ’தி ஏசியன் ஏஜ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ’இந்தியப் பங்குச் சந்தைகள் பொருட்கள் மற்றும் தரவுகளுக்கான உரிமங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிப்பதை நிறுத்தியது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதை கடினமான ஒன்றாக்கியுள்ளது. ஒழுங்குமுறை விதிகள் மற்றும் அதிகபட்ச வரி விதிப்பு ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை மற்றும் மெட்ரோபொலிடியன் பங்குச் சந்தை ஆகிய மூன்று வர்த்தகச் சந்தைகளும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 9) வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பொருட்கள் மற்றும் தரவுகளுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அதேபோல ஒழுங்குறை ஆணையத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூரைச் சேர்ந்த சந்தை ஆய்வாளர் மார்கரெட் யாங் கூறுகையில், "இந்த நடவடிக்கை இந்தியாவைச் சர்வதேசச் சந்தை என்ற அடையாளத்திலிருந்து பின்தள்ளும். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய இயலாமல் கதவை இழுத்து மூடும் நடவடிக்கையாக இது உள்ளது" என்றார். கடந்த இருபது வருடங்களாக இந்தியப் பங்கு குறியீடுகளுக்குச் சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் தான் வெளிநாட்டினருக்குச் சிறந்த வழித்தடமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon