மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

லாபம் கண்ட கோல் இந்தியா!

லாபம் கண்ட கோல் இந்தியா!

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 4.21 சதவிகிதம் லாபம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் 3,004.79 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தை விட 4.21 சதவிகிதம் கூடுதலாகும். இதே காலகட்டத்தில் 2016ஆம் ஆண்டில் ரூ.2,883.27 கோடி லாபம் ஈட்டப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் மொத்த வருமானம் ரூ.22,484.14 கோடியாகும். சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் வருமானம் ரூ.23,064.65 கோடியாகும். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்த ஜிஎஸ்டியின் தாக்கத்தால் நிலக்கரியின் வருமானம் குறைந்துள்ளது.

2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 152.04 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 147.73 டன்களாகும். கோல் இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவு ரூ.17,873.93 கோடியாகவும், அதற்கு முந்தைய ஆண்டின் செலவு ரூ.18,907.17 கோடியாகவும் இருந்தது” என்று கூறப்பட்டுள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon