மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

என் மகள் நடிக்கவில்லை: ரேகா

என் மகள் நடிக்கவில்லை: ரேகா

என் மகள் நடிக்கவில்லை; படிக்கிறாள் என தனது மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ரேகா.

கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரேகா. தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து ‘கேணி’ படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக செய்திகள் பரவின. இதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார் ரேகா.

“மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்தச் செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இது சம்பந்தமாக தவறான தகவல்களைப் பரப்பிவருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon