மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

குளிர்கால ஒலிம்பிக்: ஏமாற்றமளித்த இந்திய வீரர்!

குளிர்கால ஒலிம்பிக்: ஏமாற்றமளித்த இந்திய வீரர்!

தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்ற லூஜ் போட்டியில் இந்திய வீரர் சிவ கேசவன் தோல்வியைத் தழுவினார்.

2018ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் தொடர் தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்ற லூஜ் போட்டியில் இந்தியாவின் சிவ கேசவன் பங்கேற்றார். 36 வயதான கேசவன் இதுவரை 6 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் பங்குபெறும் கடைசி ஒலிம்பிக் போட்டி இது, எனவே அவரது விளையாட்டினை காண பல்வேறு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

1344 மீட்டர் ஓட்டத்தில் அவர் பங்கேற்று விளையாடினார். அதில் சிறப்பாக விளையாடி 48.900 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இதுவே அவரது சிறந்த வேகமான நேரமாக இருந்தது. இருப்பினும் முதல் மூன்று சுற்றுக்களில் 40 வீரர்களுக்கு அவர் இடம் பெற்றிருந்தார். நான்காவது சுற்றில் 20 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் எனவே 34ஆவது இடத்தில் இருந்த கேசவன் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை இழந்தார்.

ஆண்களுக்கான இந்த லூஜ் போட்டியில் ஆஸ்திரியாவின் டேவிட் க்ளைர்சர் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். அமெரிக்காவின் கிறிஸ் மாட்சர் வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனியின் ஜோஹன்னேஸ் வெண்கலப்பதக்கம் வென்றார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon