மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ரொனால்டோவின் பர்ஃபெக்ட் ஹாட்ரிக்!

ரொனால்டோவின் பர்ஃபெக்ட் ஹாட்ரிக்!

கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்ற லா லீகா தொடரின் ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

லா லீகா தொடர் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் வேளையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், ரியல் சொசைடேட் அணிகள் பலபரீட்சை நடத்தினர். இதில் போட்டி தொடங்கிய முதல் நிமிடமே ரியல் மாட்ரிட் அணி வீரர் லூகாஸ் முதல் கோல் அடித்து எதிரணிக்குப் பெரும் அதிர்ச்சியை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 27ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், அந்த அதிர்ச்சியிலிருந்து சொசைடேட் அணி மீள்வதற்குள் 34ஆவது நிமிடத்தில் டோனி குரோஸ்யும், 37ஆவது நிமிடத்தில் ரொனால்டோவும் இரண்டு கோல்களை அடித்தனர். எனவே, முதல் பாதி முடிவதற்குள் ரியல் மாட்ரிட் அணி 4-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி தொடங்கியதும் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் கோல் அடிப்பதைத் தடுத்து விளையாடிய ரியல் சொசைடேட் அணி வீரர்கள் நீண்ட நேரம் போராடி 74ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தனர். ஆனால், அந்த கொண்டாட்டத்தை அவர்கள் முடிப்பதற்குள் ரொனால்டோ 80ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். அதனுடன் ரியல் மாட்ரிட் அணி 5-1 என முன்னிலையும் பெற்றது. கடைசி 10 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் ரியல் மாட்ரிட் வீரர்கள் பொறுமையாக விளையாடினர், அதை பயன்படுத்திக் கொண்ட ரியல் சொசைடேட் அணி வீரர் ஆசிர் மற்றொரு கோல் அடித்தார். எனவே போட்டி நேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 5-2 என வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ரொனால்டோ பர்ஃபெக்ட் ஹாட்ரிக் அடித்தது மிகவும் சிறப்பான ஒன்று என்றே கூறலாம். பர்ஃபெக்ட் ஹாட்ரிக் என்பது கோல் அடிக்கும் வீரர் ஒரு கோலினை வலது காலிலும், மற்றொரு கோலினை இடது காலின் மூலமும், மற்றொரு கோலினை ஹெட்டிங் முறையிலும் கோல் அடிப்பதாகும். இந்த போட்டியில் அவர் அவ்வாறாக மூன்று கோல்களை அடித்தால் பர்ஃபெக்ட் ஹாட்ரிக் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon