மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

மீண்டுவரும் கட்டுமானத்துறை!

மீண்டுவரும் கட்டுமானத்துறை!

பல மாதங்களுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை மீண்டு வருவதாக பிராப்பர்டி போர்ட்சல் 99 ஏக்கர்ஸ்.காம் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளான பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி மற்றும் ஆர்.இ.ஆர்.ஏ. உள்ளிட்ட நடவடிக்கைகளால் கடந்த ஒன்றரை வருடங்களாக ரியல் எஸ்டேட் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான இந்திய மெட்ரோ நகரங்களில் வீடு மற்றும் கட்டடங்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் சில முக்கிய மெட்ரோ நகரங்களில் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக புனே, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வாடகை விகிதம் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பெங்களூர் மற்றும் மும்பையில் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதிகபட்ச விற்பனையை தலைநகர் டெல்லி மற்றும் வர்த்தகத் தலைநகர் மும்பை ஆகியவைக் கண்டுள்ளன. கோர்கான், நொய்டா மற்றும் நேவி மும்பை ஆகிய பகுதிகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஆடம்பரம் மற்றும் மிகுந்த ஆடம்பரம் உள்ளிட்ட துறைகளில் 2018ஆம் ஆண்டில் குறைந்த விற்பனை மட்டுமே காணப்பட்டுள்ளது. இப்பிரிவுகளுக்கான வாடிக்கையாளர்கள் மிகக் குறைவாக இருந்ததே விற்பனை குறைந்ததற்கான காரணமாகும். மற்ற பிரிவுகளில் விற்பனை உயர்வைக் கண்டுள்ளது.’

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon