மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ரஷ்ய விமானம் விபத்து: 71 பேர் பலி!

ரஷ்ய விமானம் விபத்து: 71 பேர் பலி!

மாஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சரதோவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 71 பயணிகள் உயிரிழந்தனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டொமோடிடோவா விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஆர்ஸ்க் நகருக்கு நேற்று உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள், 6 விமானக் குழுவினருடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போனது. விசாரணையில், மாஸ்கோவின் அர்குனோவோ பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 71 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஷ்யாவில் விமான விபத்தில் பலியானவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரஷ்யாவில் நடைபெற்ற விமான விபத்து பற்றிய செய்தி அறிந்தேன். விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon