மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ஹெல்த் ஹேமா: இளமை ரகசியம்!

ஹெல்த் ஹேமா: இளமை ரகசியம்!

‘காதலிக்க ஆசை உண்டு, காதலிக்கத்தான் யாருமில்லை’ எனச் சிலரும், ‘காதலிக்கக்கூட நேரமில்லை’ என சிலரும், ‘என்ன செய்தாலும் இந்த காதல் மட்டும் வரவே இல்லை’ என்று சிலரும் சொல்வதுண்டு. காதல் என்பது திருமணத்துக்கு முன்பு மட்டுமல்ல; திருமணத்துக்குப் பிறகும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தாலே எல்லோர் வாழ்வுமே இனிக்குமே.

இன்னும் ஓரிரு நாள்களே உள்ளன காதலர் தினத்துக்கு. எங்கெங்கும் காதலர் தின சிறப்பு நிகழ்சிகள், சிறப்பு ஆஃபர்கள், திரைப்படங்கள் எனக் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன. காதல் ஹார்மோன்களை அதிகமாக சுரக்கச் செய்வதில் சிலவற்றுக்கு முக்கியப்பங்கு உண்டு.

ஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. போர்ச்சுகல் தேசத்தைத் தாயகமாகக்கொண்ட போர்ட் ஒயின்தான் அதிகமாக உணர்வைத் தூண்டும் பொருளாகக் கருதப்படுகிறது. ஒயின், ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.

உடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் பிரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரையும் அடங்கியுள்ளது.

வாழைப்பழத்துடன் பப்பாளி, மாம்பழம், கொய்யா வகைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் பிறப்புகளின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.

பால் மற்றும் சார்ந்த உணவுகளான தயிர் (பகலில்), மோர், வெண்ணெய், நெய் இவையில்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.

ரத்த ஓட்டத்துக்கு உதவும் அல்லிசின் (allicin) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களின் இடுப்புப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் ஆண்மை பிரச்னை வராது. நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எப்போதுமே உணர்வுகளுடனும் காதலுடனும் தொடர்புள்ளது சாக்லேட். மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine) மற்றும் செரடோனின் (serotonin) ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லேட்டிலும் உள்ளன.

பீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழம் அத்திப்பழம். இந்தப் பழத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவுக்கு மிகவும் இஷ்டமான பழமாக இருந்ததில் வியப்பேதுமில்லை.

ஆண் பெண் ஆகிய இருபாலருக்குமே பாலியல் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகடோ (வெண்ணெய் பழம்). இப்பழமானது மெக்ஸிகோவின் மையப்பகுதியில் 14, 15, 16ஆம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் இந்தப் பழ மரத்தை ‘விதைப்பை மரம்’ என்றே அழைத்தனர்.

முத்துச் சிப்பிகளையொத்த மென்மையான கடல் வாழ் உயிரினம் கடல் சிப்பி. ஓட்டுக்குள் இருக்கும் சதைப்பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதியானது. ஆனால், அறிவியல் பூர்வமாக இதில் உள்ள ஜிங்க் சத்தால், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதாகச் சொல்லப்படுகிறது. நம் உடலில் ஜிங்க் சத்து குறைந்த அளவு இருந்தால், அது ஆண்மையற்ற நிலையை உண்டாக்கும். எனவே, இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காஸநோவா, ஒரு நாளைக்கு 50 கடல் சிப்பிகளை உண்பாராம்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon