மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

வாட்ஸப் வடிவேலு: இன்னிக்கு ‘கிஸ் டே’வாம்ல!

வாட்ஸப் வடிவேலு: இன்னிக்கு ‘கிஸ் டே’வாம்ல!

இனிப்பான முத்தம்? - தலையில்.

அன்பான முத்தம்? - கன்னத்தில்.

ரொமாண்டிக்கான முத்தம்? - உதட்டில்.

சூடான முத்தம்? - பைக் சைலன்சர்ல வாயை வெச்சுப்பாருங்க... தெரியும்!

இன்னிக்கு ‘கிஸ் டே’வாம்ல... வாங்களேன்.. முத்த தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடலாம்.

டெடிபியர் டே, சாக்லேட் டேவெல்லாம் ரெண்டு மூணு நாள்கள் முன்னாடிதான் வந்துச்சு. அதுக்கெல்லாம் வாழ்த்துச் சொன்னா, டெடிபியர் வாங்கிக் கொடேன் வடிவேலு, சாக்லெட் வாங்கித் தாயேன் வள்ளலேன்னு கேட்டுடுவாங்க. இதே முத்தடேன்னா செலவு இல்லே பாருங்க.

க்ளோஸ் அப் டூத் பேஸ்ட்... இந்த பேஸ்ட்டை வெச்சு பல் தேய்க்கிறவங்கதான் முத்தம் கொடுக்க முடியுமா? என்ன நியாயம் இது... அப்போ உலகத்துல பாதி பேரு முத்தமே கொடுக்க முடியாதே. பல்லே தேய்க்காத ஆடு, மாடெல்லாம் என்ன செய்யும்? கிஸ்ஸோமீட்டர் சேலஞ்ச். கருமம். கருமம். ஒருத்தன் ஊதுனா ரோஜாப்பூ வாடிடுமாம். அதே க்ளோஸ் அப் யூஸ் பண்றவன் ஊதுனா வாடின பூ மலர்ந்திடுமாம். உங்களுக்கெல்லாம் லவ்வர் கெடைச்சாலும் முத்தம் கிடைக்காதுடான்னு சாபம் விட்டுக்கிட்டு இருக்காரு பக்கத்துல ஒருத்தர்.

நீ முத்தம் கொடுத்துட்டுப் போக நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி இல்ல... ஒரு வண்டியின் பின்னால எழுதி இருந்துச்சு. ‘மேல மோதிடாதே மூதேவி’ன்னுதான் எழுதி கண்ணுல படும். இன்னிக்கு என்னவோ இப்படியொரு வாசகம். ஒருவேளை அவரும் முத்த தினத்தைக் கொண்டாடுறாரோ என்னவோ?

இந்தாங்க... ஒரு தத்துவம் தோணுச்சு எல்லாருக்கும் நீங்களும் ஷேர் பண்ணுங்க. ம்ஹூம்.. தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்க.

உதடு என்று சொன்னதும் ஒட்டிக்கொள்வதில்லை. முத்தம் என்று சொன்னதும் ஒட்டிக்கொள்கின்றன உதடுகள்.

என்னவோ போங்க, உலகம் எங்கெங்கயோ போயிட்டு இருக்கு. முத்த வகைகளைச் சொல்லிக்கொடுக்க க்ளாஸ் நடத்துறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

அனைவருக்கும் அன்பு முத்தங்கள். அன்புடன் வாட்ஸப் வடிவேலு.

(ஆம்பளைங்களுக்கு நினைச்சுப் பார்க்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.)

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon