மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

செல்வ வளமிக்க நகரங்களில் மும்பை!

செல்வ வளமிக்க நகரங்களில் மும்பை!

சொத்து மதிப்பீட்டில் உலகின் 12ஆவது பெரிய நகரமாக இந்தியாவின் மும்பை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..

நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் நேற்று (பிப்ரவரி 11) இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ நகரமான மும்பை உலகின் செல்வம் மிக்க நகரங்களின் பட்டியலில் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் முதலிடம் பெற்றுள்ளது. நியூயார்க் நகரின் மொத்த சொத்து மதிப்பு 3 டிரில்லியன் டாலர்களாகும். உலகின் மிகப்பெரிய இரண்டு பங்குச் சந்தைகள் இங்குதான் உள்ளன. இங்கிலாந்து தலைநகர் லண்டன் 2.7 டிரில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ 2.5 டிரில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும், கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ 2.3 டிரில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

சீனாவின் பெய்ஜிங் 2.2 டிரில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்திலும், ஷாங்காய் 2 டிரில்லியன் டாலர்களுடன் ஆறாவது இடத்திலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் 1.4 டிரில்லியன் டாலர்களுடன் ஏழாவது இடத்திலும், ஹாங்காங் 1.3 டிரில்லியன் டாலர்களுடன் எட்டாவது இடத்திலும், சிட்னி, சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் 1 டிரில்லியன் டாலர்களுடன் அடுத்தடுத்து முதல் பத்து இடங்களில் உள்ளன. 15 நாடுகளுக்கான பட்டியலில் 11ஆவது இடத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக கருதப்படும் மும்பை 950 பில்லியன் டாலர்களுடன் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் 15 இடத்துக்குள் சிகாகோவும் உள்ளது. இதில் சான் பிரான்சிஸ்கோ, பெய்ஜிங், ஷாங்காய், மும்பை மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் கடந்த ஆண்டுகளாக மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. ஹவுஸ்டவுன், ஜெனிவா, ஒசாகா, சியோல், ஷென்சென், மெல்போர்ன், ஜூரிச் மற்றும் டலாஸ் ஆகிய நகரங்கள் முதல் பதினைந்து இடங்களுக்குள் சிறிய வேறுபாட்டில் நழுவியுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon