மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தெலங்கானா சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய முயற்சி!

தெலங்கானா சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய முயற்சி!

தெலங்கானா மாநிலத்தின் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தும் வகையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் இருசக்கர வாகனத்தில் ஏழு நாடுகளுக்குப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தின் சிறப்பையும் அங்குச் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் எடுத்துரைக்க அந்த மாநிலச் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜெய் பாரதி தலைமையில் நான்கு இளம்பெண்கள் கொண்ட குழு இருசக்கர வாகனத்தில் நேற்று ஐதராபாத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பயணத்தை மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் அஸ்மீரா சந்துலால் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதற்கான முழு செலவையும் தெலங்கானா மாநில அரசே ஏற்கிறது.

இந்தப் பெண்கள் நான்கு பேரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைக் கடந்து மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சுற்ற உள்ளனர். இவர்கள் 50 நாள்களில் 17 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தெலங்கானா மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர், “இந்த நான்கு பெண்களும் 50 நாள்கள், 7 நாடுகளை சுற்ற உள்ளனர். இதற்கான செலவுகள் அனைத்தும் தெலங்கானா சுற்றுலாத் துறை அமைச்சகம் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon