மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தேயிலை: விலை நிர்ணயிக்க கோரிக்கை!

தேயிலை: விலை நிர்ணயிக்க கோரிக்கை!

சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, இந்திய சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் பிஜய் கோபல் சக்ரவர்த்தி பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இலைகளுக்கான விலை நிர்ணயம் இல்லாமல் இருப்பது சிறிய தேயிலை விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாகும். தேயிலை உற்பத்திக்கான செலவு கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.18 வரை ஆகிறது. சராசரியாக விவசாயிகளுக்குச் சென்று சேரும் தொகை கிலோ ஒன்றுக்கு ரூ.7 முதல் ரூ.14 ஆகும். இதனால் நாட்டில் பெருமளவு உற்பத்தி செய்யும் தேயிலை நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். , இந்திய சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தில் மொத்தம் 2.5 லட்சம் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளனர். தோட்டங்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் தேயிலையின் பங்கு மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதமாகும்” என்றார்.

இதுகுறித்து மூத்த அலுவலக அதிகாரி சவுத்ரி தெரிவிக்கையில், “சிறு தேயிலை வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான விலை நிர்ணய மோதலைத் தவிர்க்கும் வகையில் அரசு சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், திட்டங்கள் தீட்டுவது மட்டுமல்லாமல் தேயிலை இலைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்திய தேநீர் செயல் பிரிவு 30(அ) பிரிவின் கீழ் நிர்ணயிக்க வேண்டும்”என்று கோரிக்கை விடுத்தார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது