மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

ஆர்.ஜே.க்கள் அத்துமீறல்: சூர்யாவுக்கு ஆதரவாக திரைத்துறையினர்!

ஆர்.ஜே.க்கள் அத்துமீறல்: சூர்யாவுக்கு ஆதரவாக திரைத்துறையினர்!

“அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டுமானால் சூர்யா ஸ்டூலில் ஏறி நின்னுதான் நடிக்கணும்” என கிண்டலடித்த ஆர்.ஜே.க்களுக்கு தமிழ்த் திரையுலகினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. அதற்குப் பிறகு நடிக்கவிருக்கும் சூர்யாவின் 37ஆவது படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருக்கிறார். இதை சூர்யாவே உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகளாக இருக்கும் நிவேதிதா மற்றும் சங்கீதா ஆகியோர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக “அனுஷ்காவுக்கு ஹீல்ஸ்னா அமிதாபுக்கு ஸ்டூல் போட்டு நடிக்கலாம்” எனப் பேசினர். இந்தப் பேச்சு சூர்யா ரசிகர்களிடமும் திரைத்துறையினரிடம் பெரும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு திரைத்துறையினரும் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் விஷால், “இதுவா நகைச்சுவை!. இல்லவே இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக விமர்சனம் செய்வதா? சிறிதும் அர்த்தமற்றது” எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “பிரபல மியூசிக் சேனலில் ஒரு பிரபலமான நடிகரை இப்படி வெளிப்படையாக கிண்டல் செய்தது அதிர்ச்சியளிக்கிறது. அந்த இருவருக்கும் வரலாறு தெரியாது என நினைக்கிறேன். மாவீரன் நெப்போலியன் போன்ற மிகப்பெரிய சாதனையாளர்கள் தோற்றத்தில் உயரம் குறைவானவர்களே. சம்பந்தப்பட்ட சேனல் அந்த வீடியோவை முற்றிலுமாக நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இன்னும் காட்டமாக, “அங்க யாருக்கும் மூளை வளர்ச்சியப் பத்தியெல்லாம் அக்கறை இல்லையா?” என வினவியிருக்கிறார்.

2டி நிறுவனத்தின் ராஜசேகர் பாண்டியன், “இன்றைய காலகட்டத்தில் திரைத்துறைதான் எல்லோரும் எளிதாக விமர்சிக்கும் தளமாக இருக்கிறது. மிகச் சிறந்த மனிதர் ஒருவருக்கு இங்கு துளியும் மரியாதை கிடையாதா? ஏதாவது செய்ய வேண்டும். ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அவமானத்துக்குரியது. மேலும் அது அந்த விமர்சனத்தை முன்வைப்பவரின் தரத்தையும் காட்டுகிறது. நிபந்தனையற்ற மன்னிப்பு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கருணாகரன், “ஒரு டிவி நிகழ்ச்சியை நடத்த உங்களுக்கு திறமை இல்லையென்றால் இப்படி முட்டாள்தனமாக பேசாமலாவது இருங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு நடிகர்களும், இந்த செயலுக்கு தங்களுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். இது நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வெள்ளி 19 ஜன 2018