மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

‘பத்மாவத்’ தடை நீக்கம்!

‘பத்மாவத்’ தடை நீக்கம்!

'பத்மாவத்' திரைப்படத்திற்கு நான்கு மாநில அரசுகள் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

தீபிகா படுகோன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள படம் 'பத்மாவத்'. ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு சிக்கல்களைக் சந்தித்து இப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா மாநில அரசுகள் படத்தைத் திரையிட தடை விதித்துள்ளன. மேலும் வரலாற்றை தவறாக சித்தரிக்கிறார்கள் என்ற காரணம் காட்டியும் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 17) மனுத்தாக்கல் செய்யப்பட்டது. படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ளதால், இதனை அவசர வழக்காக விசாரித்து, மாநில அரசுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வ், “வரலாற்றை தவறாக சித்தரிக்கும் நோக்கம் இந்த திரைப்படத்துக்கு கிடையாது. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை” என்று கூறினார்

விசாரணை முடிவில் பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “திரைத்துறையை பொறுத்தவரை ஒரு படத்தை வெளியிடுவதா வேண்டாமா என்பதை தணிக்கை சான்றிதழ் தான் முடிவு செய்யவேண்டும். அந்த சான்றிதழ் பத்மாவத் திரைப்படத்திற்கு கிடைத்தப் பின்பும், ஏன் மாநில அரசுகள் தடை விதிக்கின்றன? தணிக்கை துறை அனுமதியளித்த படத்தை தடை செய்ய மாநில அரசுகள் உட்பட வேறு யாருக்கும் உரிமையில்லை” எனக் கூறினார். மேலும் அவர், “இந்த நான்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல் வேறு எந்த மாநிலமும் பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு மாநில அரசுகள் இதை கையாளவேண்டும்” என்றும் கூறினார்.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வியாழன் 18 ஜன 2018