மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

மாநகரெங்கும் பூங்காக்கள்!

 மாநகரெங்கும் பூங்காக்கள்!

மனித நேயரின் மாநகர மேயர் நிர்வாகத்தில் செயல்படுத்தப்பட்ட புதுமைப் பணிகளைப் பட்டியல் பட்டியலாக நாம் பார்த்து வருகிறோம். அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகளை ஒவ்வொன்றாய் பார்த்தோம். பூங்கா துறையில் மனித நேயர் செய்த அற்புதங்களை இந்த பட்டியலில் கண்டு மகிழுங்கள்.

அடிப்படைக் கட்டமைப்புத் துறை

பள்ளிக்கரணையில் அம்மா கன்வென்ஷனல் சென்டர் அமைக்க நடவடிக்கை.

*. கோட்டூர்புரத்தில் மொத்த மீன் விற்பனை அங்காடி கட்டும் பணி.

* 8 வகையான சிறப்பு காப்பகங்கள் அமைப்பு!

* அரசு மருத்துவமனைகளில் 12 காப்பகங்கள்.

* மாதவரத்தில் கனரக வாகன நிறுத்தம்.

* மண்டலம் 5, அவதான பாப்பைய்யா சாலையில், பணிபுரியும் பெண்கள் மற்றும் மகளிர் தங்கும் விடுதி.

* ரிப்பன் மாளிகை வளாகத்தில் இயற்கை நிலக்காட்சி நவீன முறையில் அமைக்கும் பணி.

*. ஷெனாய் நகரில் மாநகராட்சி ஊழியர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம்.

* மண்டலம்-5 ல் மத்திய தார் கலவை நிலையம் அமைந்திருந்த இடத்தில் வணிக வளாகம் கட்டும் பணி.

* கண்ணப்பர் திடலில் நவீன வணிக வளாகம்.

மின் துறை

* சென்னை மாநகர வீதிகளில் நல்ல வெளிச்சம், மின் கட்டணச் சேமிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு முதலான பெரும் பயன்கள் கிடைக்கும் வகையில் முதன் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

* மாநகராட்சி கட்டிடக் கூரைகளின் மீது சூரிய சக்தி தகடுகள் கொண்ட சோலார் மின்உற்பத்திச் சாதனங்கள் அமைப்பு.

* தெருவிளக்குகளில் சீரான வெளிச்சம் தரும் வகையில் மின்சுருள் அமைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டன.

* மின்சேமிப்பிற்கு தானியங்கி விசைப்பான்கள் அமைப்பு.

பணித்துறை மற்றும் நகரமைப்புத் துறை

* சைதாப்பேட்டை மாந்தோப்பு மாநகராட்சிப் பள்ளி அருகில் விலைமதிப்புமிக்க நிலத்தை ஒரு ரூபாய் கூட மாநகராட்சிக்கு செலவு இல்லாமல் திட்டத்தின் மூலம் மாநகராட்சி வசம் சேர்க்கப்பட்டது.

பூங்கா துறை

* மாநகராட்சியின் சார்பாக, மாடம்பாக்கத்தில் மூலிகை பண்ணை.

* பூங்காக்களில் மூலிகைச் செடிகள் வளர்ப்பு.

* சாலை மையத்தடுப்பு நடைபாதை ஓரங்கள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவற்றில் படியும் புகை, தூசி மற்றும் மண்ணால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பைப் போக்க தனியார் துப்புரவு நிறுவனம் மூலம் சோப்பு நீர் கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறது. இதுவும் மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக கொண்டு வரப்பட்ட திட்டம்.

* பூங்காக்களில் கிடைக்கும் நிலத்தடி நீரினை வீணாக்காமல் அப்பூங்காக்களில் உள்ள கழிவு நீரினைச் சுத்தப்படுத்தி மறுசுழற்சி மூலம் அதனை பூங்காவிற்கு பயன்படுத்த வழிவகை.

* சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் முறை மூலம் நீர் பாய்ச்சி அம்மா மாளிகை முன்புறம் அமைக்கப்பட்டுவரும் புதிய பூங்கா மேம்பாடு.

* சென்னை மாநகரெங்கும் பசுமைப் போர்வையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலை கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* முக்கியமான 40 பூங்காக்களில் கடிகாரக் கூண்டுகள் அமைப்பு.

* சிறுவர் விளையாட்டுத் திடலில் முன்னர் இருந்த இரும்பு விளையாட்டு உபகரணம் நீக்கப்பட்டு, துருப்பிடிக்காத எஃகு கம்பிகளால் ஆன புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைப்பு!

* மாநகர் முழுவதும் புதியதாக 300 பூங்காக்கள் அமைப்பு!

* சென்னையின் கறுப்பு நதியாக உள்ள கூவம் நதி சீரமைக்கப்பட்டு அதன் இரண்டு பக்கக் கரைகளில் பசுமைப் போர்வையை உருவாக்குவதற்கு புதுமைத் திட்டம்.

இப்படி சென்னையை பசுமையாக்கவும் அழகாக்கவும் ஏராளமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் மனித நேயர்.

இன்னும் மிச்சமிருக்கும் துறைகளிலும் மனித நேயர் தொட்ட உச்சத்தை தொடர்ந்து பார்க்கலாம்

காத்திருங்கள்!

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon