மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

கம்பீரக்கட்டுமானத்தை உருவாக்கும் டிவிஹெச்...!

 கம்பீரக்கட்டுமானத்தை உருவாக்கும் டிவிஹெச்...!

இந்த கட்டுமான வேலை மிகச் சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் பொறியாளர்கள், கட்டுமானத்தின் மீது சந்தேகம் கொண்டு எந்தவொரு தகவலைக் கேட்டாலும் சிறப்பாக பதில் கூறுவார்கள். குறிப்பாக, நீர் பங்கீட்டு முறை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது' - இது டிவிஹெச் - இன் கட்டுமானம் குறித்து நவம்பர்16இல் ராணுவ வீரர் ஒருவர் 'டிவிஹெச் கருத்துப்பதிவு ஏட்டில்' பதிந்த வார்த்தைகள்.

'மிகச் சிறந்த தரமான வேலை. ஒவ்வொரு பணிகளுக்குமான நிலையை, சொன்ன தேதியில் முடித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் டிவிஹெச்நிறுவனத்தினர். பல்வேறு போட்டிகளுக்கும் பணிகளுக்கும் மத்தியில் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி கெடாதவகையில் ஒவ்வொன்றாக கேட்டுக்கேட்டு முடித்துக் கொடுக்கிறது டிவிஹெச்.' இது, மற்றொரு ராணுவ வீரரின் உள்ளக்கிடக்கை.

உலக மக்களுக்கு வீடுகளையும், அபார்ட்மென்ட்களையும் கடந்த 20 ஆண்டுகளாக உருவாக்கித் தந்து கொண்டிருக்கும் சிறந்த கட்டுமான நிறுவனமான டிவிஹெச் , புதியதாக சில முயற்சிகளை செய்திருக்கிறது. ஆம். டிவிஹெச் நிறுவனத்தின் கட்டுமானத் திறனிலும் தரத்திலும் விலையிலும் மகிழ்ந்துபோன, இந்தியாவின் ராணுவத்தினருக்கான பொதுநல வீடுகள் உருவாக்கும் அமைப்பு, அபார்ட்மென்ட்களை உருவாக்கும் சில புராஜெக்ட்டுகளை டிவிஹெச் நிறுவனத்துக்கு தந்திருக்கிறது.

இந்தியாவையே கட்டிக் காக்கும் ராணுவத்தினருக்கு, அவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழும் வீடுகளைக் கட்டும் பொறுப்பை, மத்திய அரசிடம் ஒப்பந்தமாகப் பெற்று சென்னையில் கட்டிக்கொண்டிருக்கிறது டிவிஹெச். இதன் கம்பீரக் காட்சியை சென்னை, ஓஎம்ஆர் சாலையில் காணலாம். இவற்றில் வீடுகள், கிளப் ஹவுஸ், வணிக வளாகங்கள் ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது. இதில் வீடுகள் ஒவ்வொன்றும் இரண்டு முதல் நான்கு படுக்கையறை வசதிகளுடனும், கார் பார்க்கிங் வசதி கொண்ட ஸ்டில்ட் தளத்துடனும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர, டிவிஹெச் தன்னிச்சையாக செய்துவரும் சில பணிகள் குறித்த புரிதல்கள் இங்கே...

டிவிஹெச் – ஒரன்யா பே, படூர்

இங்கு 14.5 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 29 தளங்களைக் கொண்ட அடுக்குமாடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 2 படுக்கையறை முதல் 3 படுக்கையறை வசதிகள் கொண்ட இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனுடைய சிறப்பம்சங்கள் என்னவென்றால், முழுக்க முழுக்க கான்கிரீட் கொண்டு சுற்றுச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் இதன் முக்கிய நிலைக்கதவுகள் மலேசிய சந்தைகளில் கிடைக்கும் ஓக் மரங்களால் உருவாக்கப்பட்டதாகும். இதுதவிர, இதர வசதிகளாக 7 அடுக்குமாடியில் சுமார் 75,000 சதுர அடியில் கிளப் ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. உயரமான தளங்களில் தோட்டங்கள், நீச்சல்குளம், 4000 சதுர அடியில் உணவகம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

டிவிஹெச் – டைட்டானியம் சிட்டி, மண்ணிவாக்கம்

கட்டுமானத் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் டிவிஹெச், ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து, பல வீட்டு மனைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதுவும் இந்த மனைகள், சென்னையில் மனைகளை அங்கீகரிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதி பெற்றவை. இந்த டைட்டானியம் சிட்டி, மண்ணிவாக்கம் முழுக்க முழுக்க 100 ஏக்கரில் ஒரு தேர்ந்த வளர்ச்சியான நகரமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. இவற்றில் பிளஸ் பாயின்ட் என்னவென்றால், எளிதில் வில்லாக்களாகவும் வீடுகளாகவும் அபார்ட்மென்ட்டுகளாகவும் வணிக வளர்ச்சிக்கு ஏற்ற கட்டடங்களாகவும் மாற்றிக்கொள்ளும்வகையில் இந்த மனை நிலத்தோற்றம் அமைந்திருக்கிறது.

அமைவிடத்தின் சிறப்பம்சங்கள்

மண்ணிவாக்கம், மேற்கு தாம்பரத்தில் உள்ள முக்கியச் சந்திப்பு ஆகும். சென்னையின் முக்கியமான கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை டிவிஹெச் டைட்டானியம் சிட்டியின் அருகருகே அமைந்துள்ளன. இங்கிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் தேசிய நெடுஞ்சாலையில் எளிதாகச் செல்ல முடியும். இங்கு கட்டடம் கட்டும்போது மண்ணிவாக்கம் ஏரியின் அழகை ரசிக்கலாம். இந்த டைட்டானியம் சிட்டியின் அருகில் தாம்பரம், வண்டலூர், ஒரகடம், கூடுவாஞ்சேரி மற்றும் ஜிஎஸ்டி சாலை ஆகியவை போக்குவரத்துக்கான வசதியைத் தருகின்றன.

மேலும் மகேந்திரா சிட்டியும், ஶ்ரீராம் கேட்வேயும், இந்த மனைகளுக்கு அருகில் அமைந்துள்ளன. 24 மணிநேரமும் போக்குவரத்து செய்யுமளவுக்கு ரயில் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இங்கு குறைந்தபட்சம் 600 சதுர அடியில் இருந்து 2400 சதுர அடி வரை தனித்தனி மனைப்பிரிவுகள் கிடைக்கின்றன.

இவ்வாறு பார்த்துப் பார்த்து கட்டுமானத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளித்துவரும் டிவிஹெச் நிறுவனம், மேலும் சிறந்த புராஜெக்ட்டுகளை கையாண்டு வருகிறது.

விளம்பர பகுதி

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon