மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

வெற்றிப் பாதைக்குத் திரும்பும் சாம்பியன்ஸ்!

வெற்றிப் பாதைக்குத் திரும்பும் சாம்பியன்ஸ்!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்று (ஜனவரி 12) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி தனது 3ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நான்காவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. அதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் மோதின. தொடக்கம் முதல் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் கோல் அடிக்க முடியாமல் தவித்தனர். இருப்பினும் போட்டியின் 73ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் ஜிகுய்ன்ஹா ஒரு கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். இறுதிவரை நார்த் ஈஸ்ட் அணி கோல் அடிக்கவில்லை. எனவே கொல்கத்தா அணி தனது 3ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 வெற்றிகள் மட்டுமே பெற்று 12 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.

இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா அணி இந்த சீசனில் தொடக்கம் முதல் சரிவினைச் சந்தித்துவந்தது. ஆனால் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பினை கொல்கத்தா அணி பெறும் என்பதால் இனி வரும் போட்டிகள் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon