மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

இலங்கை: பெண்கள் மதுவை வாங்க விற்க அனுமதி!

இலங்கை: பெண்கள் மதுவை வாங்க விற்க அனுமதி!

இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் இருந்த தடை 38 வருடத்துக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் திறந்தவெளி சந்தை பொருளாதார நிலையைக் கொண்டுவந்தது. அதில் இருந்து இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையிலும் பல தொழில் நிறுவனங்கள் பெண்களை மதுபானம் பரிமாறும் மற்றும் விற்கும் பணியில் ஈடுபடுத்தியது.

இந்த நிலையில், சுமார் 38 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த இந்தத் தடையை ரத்து செய்து அந்நாட்டின் ஊடகம் மற்றும் நிதித்துறை அமைச்சர் மங்கலா சமரவீரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

“நாட்டில் ஆண் மற்றும் பெண் சமத்துவத்தை மீண்டும் நிலை நிறுத்தவும் மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையிலும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடையை நீக்குவது என அரசு முடிவு செய்தது. இலங்கையில் இரவு 10 மணிவரை மதுபானக் கடைகள் திறந்திருப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் வழக்கத்தைவிடக் கூடுதலாக ஒரு மணி நேரம் மதுபானக் கடை திறந்திருக்கும்” என இலங்கை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் அமைச்சர் மங்கலா சமரவீரா கையொப்பமிட்டுள்ளார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon