மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

சரிவை நோக்கித் தங்கம் இறக்குமதி!

சரிவை நோக்கித் தங்கம் இறக்குமதி!

2017-18 நிதியாண்டுக்கான இந்தியாவின் தங்கம் இறக்குமதி 650 டன்னாக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் தங்கம் இறக்குமதி நிலவரம் குறித்து அரசுக்குச் சொந்தமான MMTC-PAMP நிறுவனத் தலைவர் ராஜேஷ் கோல்ஸா அகமதாபாத் ஐஐடி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ’தங்கமும் தங்கச் சந்தைகளும்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில், “2017-18 நிதியாண்டுக்கான தங்கம் இறக்குமதி 700 டன்னாக இருக்கும் என்று முன்னதாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் தங்கத்தின் மீது முதலீடு செய்யும் போக்கு குறைந்து வருவதால் தங்கம் இறக்குமதி சற்று சரிவுடன் 650 டன்னாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய இளைய சமுதாயம் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவதில்லை. கிரிப்டோ கரன்ஸி உள்ளிட்டவற்றையே அவர்கள் பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர். ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான இந்தியாவின் தங்கம் இறக்குமதி 500 டன் வரையில் மட்டுமே இருந்தது. எனவே இந்த நிதியாண்டில் இறக்குமதி 650 டன்னை மட்டுமே எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தங்கம் விலையும் குறைந்துள்ளது. ஒரு அவுன்சுக்கு 2,000 டாலர் வரையில் சென்றாலும், இந்த ஆண்டில் தங்கத்தின் சராசரி விலை 1,280 டாலர் முதல் 1,300 டாலர் வரை மட்டுமே இருக்கும். இதனால் தங்கத்துக்கான இறக்குமதிச் செலவுகள் குறைந்து வருவாய் அதிகரிக்கும்” என்றார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon