மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

அறிவியல் மக்களுக்கே: இஸ்ரோ சிவன்

அறிவியல் மக்களுக்கே: இஸ்ரோ சிவன்

அறிவியல் என்பது மக்களுக்காகவே இருக்க வேண்டும் என்று இஸ்ரோவின் புதிய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் நேற்று பிஎஸ்எல்வி-40 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் விஞ்ஞானி சிவன்.

அப்போது அவர், ‘ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கம் என்பது இந்திய மக்களுக்கு, இந்தியாவின் பாமர மக்களுக்கு பயன்பாடு உடையதாக இருக்க வேண்டும் என்பதே. தேசத்தின் அறிவியலாளர்கள் அந்த தேசத்தின் மக்களுக்கு பயன்படும் கண்டுபிடிப்புகளுக்காக பணியாற்ற வேண்டும். அண்மையில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் அறிவோம். இனி இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற பிரம்மன் என்ற ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இயற்கை சீற்றங்களான சூறாவளி, புயல், கனமழை, போன்றவற்றை துல்லியமாக கணக்கிட முடியும். இதனால் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள்’’ என்று தெரிவித்தார் சிவன்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon