மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

புதுமையான சுட்டி!

புதுமையான சுட்டி!

பேட்டரி இல்லாமல் செயல்படும் வயர்லெஸ் சுட்டியை முதல் முறையாக ரேஷர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கேம் தயாரிப்பில் சாதனை படைத்துவந்த ரேஷர் நிறுவனம் தற்போது தொழில்நுட்பக் கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது. அதன்படி சமீபத்தில் ரேஷர் என்ற புதிய மொபைல் ஒன்றினை அதிக கிராபிக்ஸ் வசதியுடன் வெளியிட்டது. அதற்குப் பயன்படும் வகையில் புதிய ப்ராஜெக்ட் லின்டா என்ற ஒன்றினையும் அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக வயர்லெஸ் மவுஸ் (mouse) ஒன்றினைப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

வயர்லெஸ் கருவிகள் என்றாலே பேட்டரி வசதி கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தப் புதிய ரேஷர் மவுஸ் (Razer HyperFlux) பேட்டரி இல்லாமல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மவுஸுடன் வழங்கப்பட்டுள்ள மவுஸ் பேடில் காந்த சக்தி செயல்படுத்தப்பட்டு, மவுஸ் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் CES நிகழ்ச்சியில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை ரேஷர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon