மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

தை பிறந்தால் வழி பிறக்கும்!

தை பிறந்தால் வழி பிறக்கும்!

கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின், தை பிறந்தால் வழி பிறக்கும், இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் ( ஜனவரி 13) இன்று நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "நாளை தை பிறக்க போகிறது. நிச்சயம் வழியும் பிறக்கும் என கூறினார். தொடர்ந்து அவர், இதற்கு அர்த்தம் அரசியல் ரீதியில் இந்த ஆட்சி முடிய போகிறது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக காஞ்சிபுரம், ஆதனூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்ட ஸ்டாலின், அங்கு பொங்கல் வைத்தார். விழாவில் உரையாற்றிய ஸ்டாலின்"தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட மீண்டும் சட்டம் இயற்றப்படும். ஆட்சியில் எப்படி இருப்பது என்பதுதான் அதிமுகவினரின் கவலையாக உள்ளது. மக்கள் பிரச்னைகள் குறித்து அவர்களுக்கு துளியும் வருத்தமில்லை. மிக விரைவில் சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும்" என்று தெரிவித்தார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon