மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

பிளஸ் 1 : தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 1 : தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 1 தேர்வு எழுத தத்கல் திட்டத்தில் ஜனவரி 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை நேற்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, “மார்ச் மாதம் நடக்கவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வை, எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் விண்ணப்பிக்காதவர்கள் தத்கல் முறையில், ஜனவரி 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். இதற்காக, கல்வி மாவட்ட வாரியாக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல் இந்த ஆண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கும் மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறவுள்ளது. தனித்தேர்வர்கள் பிளஸ் 1 தேர்வு எழுத, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் ஓராண்டு இடைவெளியும், 15 வயது பூர்த்தியும் ஆகியிருக்க வேண்டும். மேலும், விவரங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon