மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

புதிய தோற்றத்தில் புதிய முகம்!

புதிய தோற்றத்தில் புதிய முகம்!

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் உருவாவதோ அல்லது ரீமேக் செய்யப்படுவதோ தமிழ் சினிமாவிற்குப் புதிதல்ல. ஆனால் தற்போது வெற்றிப் படமாக அமைந்த படங்களை சம்மந்தப்பட்ட இயக்குநர், படக் குழுவினரே நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம காலத்திற்கு ஏற்ப ரீமேக் செய்யும் முயற்சிகள் அரங்கேறிவருகின்றன.

சீவலப்பேரி பாண்டி திரைப்படம் 25 வருடங்களுக்கு பின் சம காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்து மீண்டும் உருவாகிவருகிறது. அதை தொடர்ந்து தற்போது 1993ஆம் ஆண்டு வெளியான புதிய முகம் திரைப்படத்தை அதன் இயக்குநர் சுரேஷ் சந்திர மேனன் 25 வருடங்கள் கழித்து ரீ மேக் செய்யவுள்ளார். ஒளிப்பதிவாளரான அவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். அவரது முன்னாள் மனைவி ரேவதி கதாநாயகியாக நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பெரியளவில் வரவேற்பு பெற்றன. த்ரில்லர் பாணியில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த படம் சுரேஷ் மேனனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

இந்தப் படத்தின் ரீமேக் பணிகளைத் தொடங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை மைனா, சாட்டை ஆகிய படங்களைத் தயாரித்த சலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. 22 ஸ்டுடியோஸ் ரவிகாந்த் இணைந்து தயாரிக்கிறார். படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon