மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

பொதுமக்களுடன் பொங்கல் :போலீஸாருக்கு உத்தரவு!

பொதுமக்களுடன் பொங்கல் :போலீஸாருக்கு உத்தரவு!

பொதுமக்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாட போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படவுள்ளது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் குடும்பத்தோடு மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் பூங்கா, பொருட்காட்சி உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்வார்கள். இதனால் பாதுகாப்புக்காக அந்த இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்படுவார்கள்.

பொங்கல் பண்டிகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் கூடுதல் காவல் ஆணையர்கள் எஸ்என் சேஷசாய், எம்சி சாரங்கன், எச்எம் ஜெயராம், அருண், கணேச மூர்த்தி ஆகியோருடன் ஆலோசித்து வருகிறார். போலீஸார் யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம் என்றும், அனைத்து போலீஸாரும் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாடுவதற்குப் பதிலாக பொது மக்களோடு கொண்டாடுவோம் என உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விடுமுறையில் சென்ற போலீஸார் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்புகின்றனர்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon