மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

ஜனவரி 15: இறைச்சி விற்கத் தடை!

ஜனவரி 15: இறைச்சி விற்கத் தடை!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி இறைச்சி விற்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேற்று (ஜனவரி 12) உத்தரவிட்டுள்ளார்.

இறைச்சி உண்ணக்கூடாது என்று திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தை இயற்றியுள்ளார். எனவே, திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரசு உத்தரவின்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. அதன்படி, ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படும். மேலும், கடைகளின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon