மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

சூப்பர் சிங்கருக்கு வாய்ப்பளிக்கும் ரஹ்மான்

சூப்பர் சிங்கருக்கு வாய்ப்பளிக்கும் ரஹ்மான்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வாய்ப்பு அளிக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருகிற ஜனவரி 21ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு, தன் இசையில் பாட வாய்ப்பு அளிப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாடும் இந்த நிகழ்ச்சியில், இதுவரை நிகில் மேத்யூ, அஜீஸ், சாய் சரண், திவாகர் மற்றும் ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஆகிய ஐந்து பேரும் பட்டத்தை வென்றுள்ளனர்.

ஆறாவது சீசனின் நடுவர்களாக பென்னி தயால், உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் ஆகிய நால்வரும் பங்கேற்கின்றனர். 2006ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி, 11 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon