மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா?

டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா?

ஹாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்துவருகின்றனர்.

இந்த நிலையில், பிராட் பிட் புதிய படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார். இதேபோல் ஜோலியும் தான் இயக்கியுள்ள ‘ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து பிராட் பிட்டுடனான பிரிவுக்குப் பிறகு தனியாக வாழ்வதால் வாழ்க்கை கடினமாக இருப்பதாக ஏஞ்சலினா ஜோலி கூறியிருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர், “12 ஆண்டுக்கால உறவைப் பிரிந்தது உணர்வுபூர்வமாக உள்ளது. பிராட் பிட்டுடனான பிரிவுக்குப் பிறகு சிங்கிளாக வாழ்வதால் வாழ்க்கை கடினமாக இருக்கிறது. சிங்களாக இருப்பது மகிழ்ச்சியாக இல்லை. இதுபோன்று என் வாழ்க்கை அமையவும் நான் விரும்பவில்லை. தற்போது உடல்ரீதியாகவும் எனக்கு சில பிரச்னைகள் உள்ளன. எனவே, உடல்நிலையையும் கண்காணிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தற்போது பிராச் லி எனும் திரைப்பட தயாரிப்பாளருடன் டேட்டிங் செல்வதாகவும் அவர்கள் இருவரும் லிவிங் டுகெதரில் வாழ இருப்பதாகவும் கூறி இந்த ஜோடி அழகாக இருக்கிறது என்று ஒன்டர்வால் என்ற பத்திரிகையில் செய்தி வெளிவந்தது.

ஆனால், இந்தத் தகவல் உண்மையல்ல என்று ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகிறது. ஆனால், ஏஞ்சலினா தரப்பிலிருந்து இதுவரை இதுகுறித்து இன்னும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் பிராச் லியுடன் ஏஞ்சலினா ஜோலி மேலிபிசண்ட் மற்றும் ஃபர்ஸ்ட் தே கில்டு மை பாதர், ஏ டாட்டர் ஆப் கம்போடியா ரிமம்பர் உட்பட பல திரைப்படங்களில் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon