மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

முத்ரா திட்டத்தில் 50 லட்சம் பேருக்குக் கடன்!

முத்ரா திட்டத்தில் 50 லட்சம் பேருக்குக் கடன்!

கடந்த இரண்டாண்டுகளில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஜனவரி 11ஆம் தேதி முத்ரா வங்கிக் கடன் திட்டம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநில நிதியமைச்சரான சுதிர் முங்கந்திவார் பேசுகையில், “முத்ரா திட்டத்தின் கீழ் 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.16,900 ஆயிரம் கோடியும், 2017-18 நிதியாண்டில் இதுவரையில் ரூ.8,800 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், 2016-17 நிதியாண்டில் 33.44 லட்சம் பேருக்கும், 2017-18 நிதியாண்டில் இதுவரையில் 16.93 லட்சம் பேருக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட சிறு நிறுவனங்களுக்கான இந்த முத்ரா கடன் திட்டமானது நமது மகாராஷ்டிர மாநிலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் இத்திட்டத்தின்கீழ் மொத்தம் 50,38,000 பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருடங்களில் அதிகபட்சமாக புனே மாவட்டத்தில்தான் அதிகம் பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நந்துர்பார் மற்றும் கட்சிரோலி ஆகிய பகுதிகளில் குறைவான கடனே வழங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றவர்களுக்கு இந்த முத்ரா கடன் கிடைக்கப்பெற்றால் அது அவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon