மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

மல்லிகைப்பூ விலை உயர்வு!

மல்லிகைப்பூ விலை உயர்வு!

பொங்கல் பண்டிகை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூவின் விலை உயர்ந்துள்ளது.

பண்டிகை என்றாலே பூக்களின் தேவை அதிகரிப்பது வழக்கம். திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் மல்லிகைப்பூ சாகுபடி செய்வதே பிரதானத் தொழிலாகும். நிலக்கோட்டை, வெள்ளோடு, செம்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப்பூ விளைவிக்கப்பட்டு திண்டுக்கல் பூ சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாக மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருக்கும் எனவும், தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விளைச்சல் குறைவினால் சந்தைக்கு மல்லிகைப்பூவின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. பொங்கல் நேரத்தில் மல்லிகைப்பூவின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைக்கோட்டை மல்லிகைப்பூ மட்டுமல்லாமல் இதர பூக்களின் விலையும் உயர்த்துள்ளது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது