மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

இதயம் இருக்கிறதா தமிழ் ராக்கர்ஸ்?

இதயம் இருக்கிறதா தமிழ் ராக்கர்ஸ்?

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதியான இன்று தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. இந்த மூன்று திரைப்படங்களுமே அதனதன் வகையில் நல்ல வரவேற்பை முதல் நாளில் பெற்றிருக்கின்றன. சுமாரான படம் என்பதற்கும் மேலாக பெயர் பெற்றுவிட்டதால் இரண்டாம், மூன்றாம் நாட்களில் பெறும் வரவேற்பு இப்படங்களின் வசூலில் முக்கிய பங்கு வகிக்கும்.

இதனால், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

தமிழ்ராக்கர்ஸ் குழுவுக்கு, தயவுசெய்து உங்களுக்கு இதயம் இருந்தால் பயன்படுத்துங்கள். நாங்கள் இந்த நாளுக்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். வரி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சினிமாத் துறை பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படங்களை ரிலீஸ் செய்ய அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறோம். எங்கள் மூன்று படங்களுக்கும் எதுவும் செய்யாதீர்கள் என்று ட்விட்டரில் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஒரு இயக்குநர் தனது படைப்புக்காக, தமிழ் ராக்கர்ஸ் போன்ற கும்பலிடம் இந்தளவுக்கு இறங்கிச்சென்று கெஞ்சுவது தமிழ் சினிமாவுக்கும், அது கட்டுப்பட்டிருக்கும் அரசாங்கத்துக்கும் அவமானமே தவிர, அதன் படைப்பாளிகளுக்கு அல்ல என்று பலரும் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவு கூறிவருகின்றனர்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon