மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

நகரமயமாக்கலில் தனித்துவமுடன் இந்தியா!

நகரமயமாக்கலில் தனித்துவமுடன் இந்தியா!

நகரமயமாக்கல் திட்டத்தில் சீனாவின் மாதிரிகளைப் பின் தொடராமல் இந்தியா தனித்துவமுடன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

நகரமயமாக்கல் திட்டம் குறித்து நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் கூறுகையில், “நமது நாட்டின் நகரமயமாக்கல் திட்டத்துக்கு நம் நாட்டைத் தாண்டி பிற நாடுகளுடைய மாதிரித் திட்டங்களை பார்க்க வேண்டிய தேவை இல்லை. ஒவ்வொரு துறையிலும் இந்தியா கொண்டுள்ள பன்முகத்தன்மையை சரிவரப் பயன்படுத்தினாலே போதும். நகரமயமாக்கலில் சீனாவின் திட்டங்களைப் பின்பற்றத் தேவையில்லை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்திக்குத் தேவையான பொருட்களையோ சூழலையோ நாம் போதுமான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சீனாவைப் பொறுத்தவரையில் கடற்கரைப் பகுதிகளை முக்கியமாகக் கொண்டே நகர்ப்புறங்கள் மேம்படுத்தப்படுகின்றன. பிற பகுதிகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இதன் விளைவாகவே ஒவ்வொரு சீனப் புத்தாண்டிலும் கடற்கரைப் பகுதி மக்கள் சீனாவின் உட்புறத்தை நோக்கிச் செல்கின்றனர். இந்தியாவிலும் அதே நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. நகரமய மேம்பாட்டுக்காக ஒவ்வொரு நகரத்திலும் வளர்ச்சி மையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்” என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon