மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

இந்திய வீரர் முன்னேற்றம்!

இந்திய வீரர் முன்னேற்றம்!

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் தகுதி சுற்றுப் போட்டிகளில் இந்தியா சார்பில் யூகி பாம்ரி இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு முன்னேறினார்.

இந்திய வீரர் யூகி பாம்ரி இன்று (ஜனவரி 12) நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் டேப்யேர்னர் உடன் மோதினார். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய யூகி பாம்ரி முதல் செட்டினை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது செட்டில் கார்லஸ் போராடி வெற்றிபெற முயற்சித்தார். ஆனால் அவரால் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் 6-2 என இரண்டாவது செட்டையும் யூகி பாம்ரி கைப்பற்றி அடுத்த சுற்றிற்கு முன்னேறினார். இதுவரை இவர் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் லீக் சுற்றிற்குள் நுழைந்தது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் இறுதி தகுதி சுற்றிற்கு முன்னேறி உள்ள யூகி பாம்ரி நாளை (ஜனவரி 13) நடைபெறவிருக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் லீக் சுற்றிற்குள் நுழைவார்.

நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் கனடா நாட்டினை சேர்ந்த பீட்டர் பொலன்ஸ்கி உடன் மோத உள்ளார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon