மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு!

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு!

தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு ஜனவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி, “தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில், இரண்டாம் ஆண்டுக்கு ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரையும், முதல் ஆண்டுக்கு ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 17ஆம் தேதி வெளியாகிறது. தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் தாங்கள் படித்த நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பித்த பயிற்சி நிறுவனங்களிலும், சான்றிதழ்களைப் பெறலாம். இந்தத் தேர்வின் விடைத்தாள் நகல்களைப் பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில், குறிப்பிட்டுள்ள கட்டண தொகையை, ஜனவரி 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். பின்னர், ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon