மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

ட்ரம்பைப் பின்னுக்குத் தள்ளிய மோடி!

ட்ரம்பைப் பின்னுக்குத் தள்ளிய மோடி!

சர்வதேச ஆய்வு நிறுவனம் உலகத் தலைவர்கள் குறித்து நடத்திய ஆய்வில், அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பின்னுக்குத் தள்ளி இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3ஆவது இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச அளவில் காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன் இணைந்து உலகத் தலைவர்களுக்கான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தப் பட்டியலில் 21 புள்ளிகளுடன் ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து 20 புள்ளிகளுடன் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வரிசையில் 8 புள்ளிகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சவூதி அரசர் சல்மான் பின் அப்துலஜீஸ் அல் சவுத், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ, ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் முறையே 4 முதல் 10வது இடம் வரை பெற்றுள்ளனர். இந்த ஆய்வு 50 நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்கு இடையே நடத்தப்பட்டது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon