மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

உலகக் கோப்பை: தயாராகும் அணிகள்!

உலகக் கோப்பை: தயாராகும் அணிகள்!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நாளை (ஜனவரி 13) நியூசிலாந்தில் தொடங்க உள்ளன.

மொத்தமாக 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதுவரை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டிகள் 11 முறை நடைபெற்றுள்ளன. அதில் இரண்டு முறை நியூசிலாந்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த முறையும் நியூசிலாந்தில் போட்டிகள் நடத்தப்படுவதால் 3 முறை உலகக்கோப்பையை நடத்திய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கியது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 11 உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 3 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு முறையும் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றி உள்ளன. நடப்பு சாம்பியனாக வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon