மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

நாச்சியார்: வியாபாரம் தொடங்கியது!

நாச்சியார்: வியாபாரம் தொடங்கியது!

இயக்குநர் பாலா ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை வைத்து இயக்கிவரும் நாச்சியார் திரைப்படத்தின் பிசினஸ் தொடங்கிவிட்டது.

கடந்த 10ஆம் தேதி நாச்சியார் திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவித்தனர். இவ்வளவு சீக்கிரத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்றால் பாடல் ரிலீஸ், மற்றொரு டிரெய்லர் ரிலீஸ் இதெல்லாம் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. எனவே இதுகுறித்து விசாரித்தபோது, பொங்கல் சமயத்தில் ரிலீஸாகும் முக்கியமான மூன்று படங்களின் வேகத்தில் நாச்சியார் காணாமல் போகக்கூடாது என்பதற்காக இசை வெளியீடு உள்ளிட்ட விழாக்களை தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கின்றனர்.

பொங்கலுக்கு ரிலீஸாகும் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக சூர்யா பிஸியாக இருப்பதாலும் இவ்விழா நிறுத்தப்பட்டிருக்கிறது. பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு நாச்சியார் திரைப்படத்தின் பாடல்கள் ரிலீஸாகும் என அறியப்படுகிறது. ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதால், படத்துக்கு செட்டில் செய்யவேண்டிய பணத்தைக் கொடுக்கவேண்டுமென்பதால் பட வியாபாரத்தை தொடங்கிவிட்டார் இயக்குநரும், தயாரிப்பாளருமான பாலா.

நாச்சியார் படத்தின் தமிழக உரிமையை மதுமதி ஃபிலிம்ஸ்-ஐ சார்ந்த டாக்டர் பி.காளிதாஸ் பெற்றிருக்கிறார். மேலும் ஓவர்சீஸ் உரிமையை யுனிடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.மொஹமத் யஹியா வாங்கியிருக்கிறார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon