மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

சோயாபீன் விநியோகம் அதிகரிப்பு!

சோயாபீன் விநியோகம் அதிகரிப்பு!

நடப்பு பயிர் பருவத்தின் முதல் காலாண்டில் சோயாபீன் விநியோகம் 10.44 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக இந்திய சோயாபீன் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி சோயாபீன் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு பயிர் பருவத்தின் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான முதல் காலாண்டில் சோயாபீன் விநியோக அளவில் 3.99 லட்சம் டன் அளவிலான சோயாபீன் இருப்புத் தேவைக்குப் பயன்படுத்தப்படும். மேலும் இக்காலாண்டுக்கான சோயாபீன் உற்பத்தி 91.46 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் கையிருப்பாக 13.03 லட்சம் டன் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோயாபீனிலிருந்து எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான தேவை 85 லட்சம் டன்னாக உள்ளது. மேலும், ஏற்றுமதி அளவு 2 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த விதைப்புக்காக 12 லட்சம் டன் அளவிலான சோயாபீன் பயன்படுத்தப்படும். மேலும், உள்நாட்டு நேரடி நுகர்வுக்கு 1.5 லட்சம் டன் அளவிலான சோயாபீன் எடுத்துக்கொள்ளப்படும். இவையெல்லாம் போக, வரும் ஆண்டிற்கான கையிருப்பு 3.99 லட்சம் டன்னாக இருக்கும் என்று சோயாபீன் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon