மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

9000 இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு!

9000 இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 9 ஆயிரம் இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பகுதியில் அடிக்கடி கலவரமும், தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இதனால் ஜம்மு-காஷ்மீர் பகுதி எப்போதும் பதற்றமாகக் காணப்படும். இந்நிலையில் அப்பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கு, சுமார் 9000 இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

"2016ஆம் ஆண்டு ஏற்பட்ட பதற்றமான சூழலின்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4,327 இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற உத்தரவிட்டுள்ளேன். சமரசம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள்தான் முன்னேற்றத்துக்கான ஒரே வழி ஆகும். இதன் காரணமாக காஷ்மீரில் அமைதியை மீண்டும் கொண்டுவர 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை வைக்காவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி தடைப்படும்’’ என்று மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon