மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

சண்டக்கோழி 2வில் கீர்த்தி சுரேஷ் குடும்பம்!

சண்டக்கோழி 2வில் கீர்த்தி சுரேஷ் குடும்பம்!

விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சண்டக்கோழி2 படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குக் கீர்த்தி சுரேஷின் குடும்பம் வருகை தந்துள்ளது.

2005ஆம் ஆண்டு விஷால்-இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. தற்போது இதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் சண்டக்கோழி 2 விலும் அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வரலட்சுமி, ஹரீஷ் பெராடி ஆகியோர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கின்றனர்.

விஷாலின் 25ஆவது படமாக உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக நடிகைகள் தங்களது குடும்பத்தினரைப் படப்பிடிப்புக்கு வர அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தனது குடும்பத்தினரைப் படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்து படக் குழுவினரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள செய்து மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறார் கீர்த்தி. அந்தப் புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார். படத்தை வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon