மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

வேகமெடுக்கும் எங் மங் சங்!

வேகமெடுக்கும் எங் மங் சங்!

குலேபகாவலியைத் தொடர்ந்து பிரபு தேவா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘எங் மங் சங்’. இதில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.

எம்.எஸ்.அர்ஜுன் இயக்கிவரும் இதில் பிரபு தேவா குங்ஃபூ பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, தங்கர் பச்சான், ‘பாகுபலி’ பிரபாகர், ‘கும்கி’ அஸ்வின், சித்ரா லட்சுமணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். அம்ரீஷ் இசையமைத்துவரும் இதற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். ‘வாசன் விஷுவல் வென்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் – கே.எஸ்.சிவராமன் இணைந்து தயாரிக்கின்றனர்.

தற்போது, இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபாகர், தங்கர் பச்சான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவரும் நிலையில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon