மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

தெலுங்கு வாய்ப்பையும் விடாத கேத்ரின்

தெலுங்கு வாய்ப்பையும் விடாத கேத்ரின்

தமிழில் வெளியான ‘கணிதன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார்..

அதர்வா நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் கணிதன். டி.என்.சந்தோஷ் இயக்கிய இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு, தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்து நடித்துவரும் கேத்ரின் தற்போது ‘கலகலப்பு 2’ வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார்.

‘கணிதன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தமிழில் இயக்கிய சந்தோஷ், தெலுங்கிலும் இயக்குகிறார். அதர்வா வேடத்தில் நிகில் சித்தார்த் நடிக்கிறார். கதாநாயகியாக யாரை தேர்ந்தெடுப்பது எனப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த நிலையில் கேத்ரின் இயக்குநர் சந்தோஷைத் தொடர்புகொண்டு, “தமிழில் நான்தான் நடித்திருந்தேன். எனவே, தெலுங்கிலும் நான் நடித்தால் சிறப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தெலுங்கில் கணிசமான ரசிகர்களைக்கொண்டுள்ள அவரையே கதாநாயகியாகப் போடலாம் எனப் படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon