மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

2017: 138 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்!

2017: 138 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்!

கடந்த 2017ஆம் ஆண்டில் இந்திய ராணுவ நடவடிக்கையினால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 138 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் பகுதி எப்போதும் பதற்றமாகக் காணப்படும்.

கடந்த ஆண்டில் பாகிஸ்தான் படைகள் 860 முறை எல்லை தாண்டிய அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதற்கு இந்திய ராணுவம் கடுமையான முறையில் பதிலடி கொடுத்ததாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் எல்லை மீறலுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் பதிலடியில் 138 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 155 வீரர்கள் காயமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 28 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் ராணுவ உயிரிழப்புகளை ஒப்புக்கொள்ளாமல், அவற்றை பொதுமக்கள் உயிரிழப்புபோல் காட்ட முயற்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon