மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

இந்திரா காந்தி கேரக்டரில் வித்யா பாலன்

இந்திரா காந்தி கேரக்டரில் வித்யா பாலன்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எழுத்தாளர் சகாரிகா கோஷ் வெளியிட்ட நூலின் உரிமையை வாங்கியுள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டுக் காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்தியாவின் முதல் மற்றும் கடைசிப்

பெண் பிரதமரான இந்திரா காந்தி 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தியாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களைத் தொகுத்து தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ், ‘இந்திரா: இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். வித்யா பாலன் இந்த நூலினை திரைப்படமாக தயாரிப்பதற்கான உரிமையை ராய் கபூர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சகாரிகா கோஷிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை சகாரிகா கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திரா காந்தி வேடத்தில் நடிகை வித்யா பாலன் எப்படி நடிக்கப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று கூறியிருக்கிறார் கோஷ்.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வியாழன் 11 ஜன 2018