மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

விலை உயரும் ஃபோர்டு கார்கள்!

விலை உயரும் ஃபோர்டு கார்கள்!

இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியா, தயாரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதின் காரணமாக ஜனவரி முதல் கார்களின் விலையை 4 சதவிகிதம் வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் தலைவர் வினய் ரெய்னா கூறுகையில், “மூலப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், உள்ளீடு மற்றும் சரக்கு செலவுகளில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் இருப்பதாலும் விலையேற்றம் அவசியமாகிறது. இதைச் சீர் செய்து வாடிக்கையாளர்களை முழுமையாகப் பாதிக்காதவண்ணம், 4 சதவிகிதம் விலை உயர்வு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்த விலையேற்றம் ஃபோர்டு நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும். இதில் தற்போது புதிதாக அறிமுகமான ஃபோர்டு எகோஸ்போர்ட் கார்களும் அடங்கும். இதன் காரணமாக ரூ.7,31,200 விலை கொண்ட ஃபோர்டு எகோஸ்போர்ட் வாகனத்தின் விலை 30,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஃபோர்டு நிறுவனம், ரூ.4.8 லட்சம் விலை கொண்ட பிகோ கார்களில் தொடங்கி, ரூ.71.62 லட்சம் விலை கொண்ட முஸ்டாங் கார்கள் வரை பல்வேறு மாடல்களைத் தயாரித்து விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon